தெற்கு இங்கிலாந்தில் 1 மணி நேரத்தில் சுமார் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ள நிலையில் லண்டன் உட்பட பல பகுதிகளுக்கு புயல் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது.
தெற்கு இங்கிலாந்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் லண்டன் உட்பட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் லண்டனிலிருக்கும் Newham மற்றும் Whipps Cross மருத்துவமனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரும் நோயாளிகளை வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதற்கிடையே லண்டனில் 1 மணி நேரத்தில் சுமார் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழலில் வானிலை ஆராய்ச்சி மையம் லண்டன் உட்பட பல பகுதிகளுக்கு புயல் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.