ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளுவர் மாவட்டத்தில் பாஜக கட்சியினர் பிரதமர் திரு.நரேந்திரர் மோடி அவர்களை அவதூறாக பேசிய பாதிரியாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவரான ராஜ்குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர் 100 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பா.ஜ.க-வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .