Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதை யாரு பண்ணிருப்பா….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து 7 1\2 பவுன் நகை மற்றும் ரூ. 5000 பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலுள்ளவர்கள் இதுகுறித்து கோபி காவல்துறையினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவருடைய மகன் சிவகுமாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவக்குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 5000 பணம் மற்றும் 7 1\2 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்றனர். அதன்பின் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |