வெஜ் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 3
தக்காளி – 3
கேரட் – 2
பீன்ஸ் – 50 கிராம்
பச்சை பட்டாணி – 1 கப்
உருளைக் கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 4
தயிர் – 2 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
பட்டை – 1
லவங்கம் – 4
ஏலக்காய் – 3
ஜாதிக்காய்த் தூள் – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதிக்காய், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும் . அதில் இஞ்சி – பூண்டு விழுது , பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் . பிறகு கொத்தமல்லி, புதினா , காய்கறிகள் , மிளகாய்த் தூள், தயிர் , ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான உப்பு சேர்த்து மெதுவாக கிளற வேண்டும் . 4 கப் சுடுத்தண்ணீரை அரிசி கலவையில் ஊற்றிக் கிளறி குக்கரை மூடிவிட்டு சிம்மில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான வெஜ் பிரியாணி தயார்!!!