‘சில்லுனு ஒரு காதல்’ பட குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்த சீரியலின் முக்கிய நடிகர், நடிகைகளின் நடிப்பை தாண்டி குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைதொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரேயா சர்மா கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கயகுடு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சர்மா தற்போது புதிய படங்களின் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களையும், வீடியோக்களையும் அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது குட்டி டவுசர் மட்டும் அணிந்து எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CRq1knwpFaO/?utm_medium=copy_link