ரியோ, பவித்ரா இணைந்து நடித்துள்ள கண்ணம்மா என்னம்மா ஆல்பம் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
#KannammaEannamma 👩❤️👨#PingRecords
Streaming Now 💥
Link is here https://t.co/lBfMk4usna@samvishal280999 @itspavitralaksh @rio_raj @PingRecords @noiseandgrains @DONGLI_JUMBO @arun_capture1 @karya2000 pic.twitter.com/jGKlR0kl9o
— Rio raj (@rio_raj) July 26, 2021
தற்போது ரியோ குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார். ‘கண்ணம்மா என்னம்மா’ என்ற இந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ஷாம் விஷால் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலில் குக் வித் கோமாளி பிரபலம் பாலாவும் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த ஆல்பம் பாடலின் புரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கண்ணம்மா என்னம்மா பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .