Categories
தேசிய செய்திகள்

மீராபாய் சானுவுக்கு காவல்துறையில்… கூடுதல் எஸ்பி பதவி…!!!

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் அரசு காவல்துறையில் எஸ்பி பதவியை வழங்க முடிவு செய்துள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தவர் என்ற பெருமை மீராபாய் சானுவை சேரும். மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு காவல்துறையில் எஸ்பி பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்க அம்மாநில முதல்வர் பிரேன் சிங் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |