விருதுநகர் மட்டன் சுக்கா
தேவையான பொருட்கள் :
சின்னவெங்காயம் – 250 கிராம்
எலும்பில்லாத மட்டன் – 250 கிராம்
இஞ்சி – 60 கிராம்
பூண்டு – 60 கிராம்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தையும், மட்டனையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் , இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் ஆட்டுக் கறி, மிளகாய்த்தூள் , சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன், சீரகத்தூள் , கொத்தமல்லித்தழை , உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான விருதுநகர் மட்டன் சுக்கா தயார் !!!