Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் பள்ளிகள் திறப்பு… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடம் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் தற்போது பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் இன்றைய சூழலில் கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும் பள்ளிகள் திறப்பதால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு இன்னும் 4,5 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |