விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக எம்.பி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும் வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக இன்று காலை 10 மணிமுதல் விருப்ப மனுக்களை அளித்துவருகின்றது. இன்று மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்.பியுமான கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் உதயநிதிஸ்டாலின் இளைஞரணி செயலாலராக பதவியேற்ற நிலையில் உதயநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக எம்.பி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.