கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் மற்றொரு முன்னணி நடிகரின் மகன் இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு பிரபல நடிகரின் மகன் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் ஜெயராமின் மகன், காளிதாஸ் ஜெயராம் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் கமலஹாசனுடன் இணைந்து பஞ்சதந்திரம், தெனாலிராமன், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.