Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீன் முட்டை பொரியல் செய்யலாமா !!!

மீன் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்:

மீன் முட்டை –  500 கிராம்

சின்ன வெங்காயம் –   500 கிராம்

பூண்டு – 20 பற்கள்

மஞ்சள்தூள் – சிறிதளவு

பச்சைமிளகாய் – 8

இஞ்சி, பூண்டு விழுது –  1  டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – சிறிதளவு

மீன் முட்டை பொரியல் க்கான பட முடிவு
செய்முறை:

முதலில் மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,  பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு,  இஞ்சி, பூண்டு விழுது , மஞ்சள்தூள், கறிவேப்பிலை ,உப்பு சேர்த்து   வதக்க வேண்டும். பின் மீன் முட்டையை போட்டு நன்கு  கிளற வேண்டும். மீன் முட்டை நன்கு வெந்ததும்   தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கினால் சூப்பரான மீன் முட்டை பொரியல் தயார் !!!

Categories

Tech |