Categories
உலக செய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துக்கு இவ்ளோ மவுசா…? ஆய்வை மேற்கொண்ட மாணவர்கள்…. முக்கிய தகவலை வெளியிட்ட ஆசிரியர்….!!

சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பாக திரிக்கப்பட்ட கருத்துகளே இணையதள வாசிகளால் அதிகளவு பகிரப்படுவதாக அமெரிக்க மாணவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் சமூக ஊடகம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்கள். இந்த ஆய்வில் மொத்தமாக சுமார் 47,000 சமூக ஊடக பதிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிலும் 23,000 சர்ச்சைக்குரிய பதிவுகளும், 24,000 சர்ச்சையில்லாத பதிவுகளும் ஆகும். இந்த ஆய்வின் முடிவில் உண்மைக்குப் புறம்பாக திரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளே மக்களால் அதிகமாக பகிர பட்டவையாகவோ அல்லது கமெண்ட் செய்யப்பட்டவையாகவோ திகழ்கிறது.

அதாவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 47,000 பதிவுகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்கு 60,000 கமெண்டுகளும், சர்ச்சையில்லாத பதிவுகளுக்கு 25,000 கமெண்டுகளும் பதிவாகியது தெரியவந்துள்ளது. இவ்வாறு அதிகமாக பகிரப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பொதுமக்கள் எளிதாக பிளவுபடுத்த படுகிறார்கள் என்று ஆய்வின் இணை ஆசிரியர் கூறியுள்ளார்.

Categories

Tech |