பூஜா ஹெக்டே இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சமூகம் எனக்கு எவ்வளவோ கொடுத்து இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு நான் திருப்பிக் கொடுக்கவேண்டும். அதனால் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் மருத்துவ உதவிகளை எனது தொண்டு நிறுவனம் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.