Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கணவர் அறைக்கு சென்ற …. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீசார் விசாரணை ….!!!

 மயிலாடுதுறையில் குத்தாலம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள ஆதம் நகரில் கணபதி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், குமாரி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது மனைவி குமாரி மற்றும் குழந்தைகளுடன் கணபதி வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்  தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது . இதன்பிறகு கணவர் கணபதி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கச் சென்று விட்டார்.

இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மனைவி குமாரி ,கணவர் கணபதி தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் குத்தாலம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருந்த கணபதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |