மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் கூலி தொழிலாளியான வீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து ஆவாரம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வீரனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விட்டது.
இதனால் படுகாயமடைந்த வீரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.