Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’… ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள்  ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். .

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீசாக உள்ளது. மேலும் பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு இசையமைத்த எம்எம் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனங்களான டீ-சீரிஸ் மற்றும் லஹரி மியூசிக் நிறுவனங்கள் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. .

Categories

Tech |