பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவுக்கு பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் “ஆம்பர் பிளஸ்” பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட உடன் அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை.
மேலும் பீட்டா வகை கொரோனா வைரஸ் பிரான்சில் சுமார் 3.7 சதவீதம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ரீயூனியன் தீவில் பீட்டா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ரீயூனியன் தீவில் உள்ள தொற்றையும், பிரான்சில் உள்ள தொற்றையும் பிரித்தானிய அதிகாரிகள் குழப்பிக் கொண்டார்களா என நிபுணர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரான்ஸ் “ஆம்பர் பிளஸ்” பட்டியலிலிருந்து ஆம்பர் பட்டியலுக்கு விரைவில் மாற்றப்படும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.