இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவிலிருந்து வடமேற்கில் லுவூக் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த லுவூக்கிலிருந்து 200 கிலோமீட்டர் மீட்டர் தொலைவில் சுலவேசியில் பாலு என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து 97 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டும் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.