ராஜஸ்தானில் வரதட்சனை கொடுமை கேட்டு மாமனார் முன்பு நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதால் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வரதட்சிணை கொடுமை என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வரதட்சணை கொடுக்காததால் பெண்ணை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி கொலை செய்கின்றனர். சில பெண்கள் வரதட்சனை கேட்டு தனது கணவர் குடும்பம் துன்புறுத்துவதை தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது ராஜஸ்தானில் வரதட்சனை கொடுமை கேட்டு மாமனார் முன்பும் நிர்வாணப்படுத்தி, கொடுமை படுத்தியதால் புதுப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த முகேஷ்க்கும், பிரியா என்ற பெண்ணிற்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான முதலே வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தில் மாமனார் மாமியார் அனைவரும் உடல்ரீதியாக அவரை கொடுமையாக தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சித்திரவதையை தாங்க முடியாத அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.