Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியே இருந்த நல்லா இருக்கும்… அதிகரித்து வரும் அணையின் நீர்மட்டம்… மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்…!!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகின்றது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு குடிநீருக்கும் 5 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் திறந்து விடப்படும். இந்நிலையில் 152 அடி உயரமுள்ள இந்த பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ளலாம் என சுப்ரீம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனால் முல்லை பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் தொடந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |