Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நீயா இப்படி பண்ணுன….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. சிசிடிவி கேமராவால் வெளிவந்த உண்மை…!!

கடையில் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு நகை கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடையில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனதாக ரகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது நகை கடையில் பணிபுரியும் கீதா என்ற பெண் தங்க நகைகளை திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |