Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அப்பா என்னை திட்டிட்டாரு” சிறுவன் செய்த செயல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தை கண்டித்ததால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டை பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜெயா பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெய பிரசாத் ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்ததால் ரஞ்சித்குமார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |