விருச்சிகம் ராசி அன்பர்களே.! பழைய பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவுக்கு வரும்.
இன்று சிலருக்கு வேலையின் காரணமாக பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகள் இருக்கும். எதிர்பார்த்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களை பாராட்டுவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகிச்செல்லும். செலவுகள் வந்து விலகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் அடையக்கூடும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பிரிந்து சென்ற தம்பதியினர் இன்று எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேற்றமும் இருக்கும். பழைய பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவை கொடுக்கும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் இருக்கும். எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். எண்ணற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெண்களுக்கு கையில் காசு பணம் புரளும். காதலின் நிலைபாடுகள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஒரு சில நேரங்களில் இந்த காதல் நமக்கு தேவைதானா என்ற எண்ணங்கள் கூட தோன்றும். மனதை அமைதிப்படுத்தி எதையும் கையாள வேண்டும். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். கல்வியில் ஆர்வம் இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் வெள்ளை