கும்பம் ராசி அன்பர்களே.! உடன்பிறந்தவரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி இருக்கும். ஏனென்றால் இறைவனின் வழிபாடு உங்களுடைய மனதை அமைதிப்படுத்த உதவும். மனம் அமைதியாகி விட்டதால் எல்லா வகையிலும் வெற்றி இருக்கும். பணியின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கண்டிப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுடைய உழைப்புக்கு நல்ல பலன் இருக்கும். இறைவனின் அருள் நல்லபடியாக இருக்கும். நண்பர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழில் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சில காரியங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்பார்ப்புடன் முடியும் என்று நினைத்த காரியம் சற்று தாமதமாக முடியும். உடன்பிறந்தவரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
அவசரப்படவேண்டாம். அலட்சியப்படுத்த வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக பேச வேண்டும். பெண்களுக்கு அதிகப்படியான அவசரங்கள் ஏற்படும். அவசரம் காட்டிவிட்டால் காரியங்களில் தோல்வி தான் மிஞ்சும். சூழ்நிலைகளைப் பொறுத்து பெண்கள் முடிவுகளை எடுக்க வேண்டும். காதலில் முடிவுகள் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்கள் பொறுமையாக இருந்து காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். படிப்பில் மட்டும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். படிப்பை தவிர வேறு எதிலும் அக்கறை செல்லக்கூடாது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை