நாம் அனைவரும் கோயிலுக்கு போய் வருவது வழக்கம். உண்டியலில் காசு போடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், என்றைக்காவது கோயிலில் ஏன் உண்டியல் வைத்திருக்கிறார்கள் என்று யோசனை செய்து இருக்கிறீர்களா? கோவிலில் கடவுளுக்கு பல பரிகாரங்கள் செய்வது வழக்கம். ஆனால் அனைவரும் ஒற்றுமையாக செய்யும் ஒரே விஷயம் கோயில் உண்டியலில் பணம் போடுவது. அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கும். தங்களது வசதிக்கேற்றவாறு காணிக்கை செலுத்துவார்கள். இதனால் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. இதனை ஒரு யாகவே கருதப்படுகின்றது.
கோவில்களில் இறைவனுக்கு செய்யும் பொருள் தியாகத்திற்கு அடையாளமாக பார்க்கப்படுகின்றது. நாம் உண்டியல் காணிக்கை செலுத்துகிறோம். ஆனால் நாம் காணிக்கையாகப் போடும் காசுகள் யாவும் கடவுளை சென்றடைவதில்லை. அந்த காசுகள் அனைத்தும் கோவில்களில் கடவுளின் சேவைகளுக்காக பயன்படுகின்றது. நம் நாட்டில் பல்வேறு மதங்கள், பல்வேறு நம்பிக்கைகள், வழிபாடுகள் இருக்கின்றது. நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கடவுள்களை மட்டும் நம்பாமல் அதுல திருவிழாக் கொண்டாட்டங்களில் நம்புகின்றனர்.
உண்டியலுக்கு பின்னால் இருக்கும் புராணக்கதை:
கலியுகம் தொடங்கிய போது செல்வக் கடவுளான குபேரனிடம் இருந்து வெங்கடாஜலபதி பதினான்கு லட்சம் ராமமுத்திரர்களை கடன் வாங்கினார். அவனை தனது திருமணத்திற்காக செலவு செய்தார். அந்த கடனை கலியுகத்தின் முடிவுக்குள் திருப்பி தந்து விடுவதாக ஒப்புக்கொண்டார். இதற்கு சாட்சி சிவனும் பிரம்மனும் ஆவார்கள் என கூறினார். ஆனால் அவர்களால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை.
ஆகையால் வெங்கடாசலபதி தனேஸ்வரரிடமிருந்து கடன் பெற்று குபேரனின் கடனை அடைத்தார். இது திருப்பதியில் உள்ள புராணத்தில் இந்த கதை பற்றி கூறப்படுகிறது. விஷ்ணு குபேரனுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதற்காக கோயில் அதிகாரிகளால் உண்டியல் அமைக்கப்பட்டது. பின்னர் உலகமெங்கும் பல கோயில்கள் குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள கோயில்கள் அனைத்திலும் உண்டியல்கள் வைக்கப்பட்டது.
இந்த கதை பல பக்தர்களின் நம்பிக்கையை ஈர்த்துள்ள நிலையில், கோயில்களில் உள்ள உண்டியல் மூலமாக கோயிலுக்கு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கும், ஊழியர்களின் சம்பளம், வாழ்வாதாரத்திற்கும், கோயில் நிதியாக பயன்படுகின்றது. பணம் எந்த கடவுளையும் நேரடியாக சென்றடையவில்லை. அது கடவுளின் சேவைக்கான பயன்படுகின்றது. இதனால் நீங்கள் கோயிலுக்குச் செல்லும்போது உங்களால் முடிந்த காணிக்கையைச் செலுத்துங்கள்.