Categories
தேசிய செய்திகள்

“டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கபதக்கத்தின் மதிப்பு”… இந்தியாவில் எவ்வளவு தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட்டுள்ள தங்கப் பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதில் தெரிந்துகொள்வோம்.

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருந்தது. கொரோனா காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது 23-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிக்காக உலகில் உள்ள பல்வேறு நாட்டில் உள்ள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு வீரர் வெற்றி பெற்றால் அவரது பெயர் வரலாற்றில் இடம் பெறும். இந்தியாவில் தங்கம் பதக்கம் வாங்கும் வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் மிகப்பெரியது.

இதற்கு முன்னதாக பதக்கம் வென்ற பிவி சிந்து, மேரிகோம் என பலரை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இந்த முறை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுழற்சி முறையில் கிடைக்கும் தங்கத்தை வைத்து பதக்கங்களை தயார் செய்துள்ளனர். இதற்காக 62 லட்சம் பயன்படுத்த செல்போன்கள் அளிக்கப்பட்டு, அதிலிருந்து 32 கிலோ தங்கம் எடுக்கப்பட்டு அதன் மூலம் பதக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தங்கப்பதக்கமும் 556 கிராம் எடை கொண்டது.

வெள்ளிப்பதக்கம் 550 கிராம் எடை கொண்டது. வெண்கலப்பதக்கம் 450 கிராம் எடை கொண்டது. 556 கிராம் தங்கத்திற்கு இந்தியாவின் மதிப்பு சுமார் 26 லட்சம். ஆனால் ஒலிம்பிக்கில் வாங்கப்படும் தங்கத்திற்கு இந்தியாவின் மதிப்பு வெறும் 65 ஆயிரத்து 750 தான். ஏன் என்று கேட்கிறீர்களா? ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் தங்கப்பதக்கம் முழுவதுமே தங்க பதக்கம் அல்ல. வெள்ளி பதக்கத்தில் தங்க முலாம் பூசிய தங்கப்பதக்கம். 550 கிராம் எடையுள்ள வெள்ளி பதக்கத்தின் மேல் பூசப்பட்டிருக்கும் தங்க மூலம் 6 கிராம்.

இதனால் 6 கிராம் தங்கத்திற்கு, இந்தியாவின் மதிப்பு 28 ஆயிரத்து 500 மற்றும் வெள்ளிக்கு 37 ஆயிரத்து 790 என்று மதிப்பிட்டால் மொத்தம் 65 ஆயிரத்து 790 தான் கிடைக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பதக்கம் எல்லாம் ஒரு மரத்தால் செய்யப்பட்ட சிறிய பெட்டியில் கொடுக்கப்படும். இந்த பெட்டி ஜப்பானிய பாரம்பரிய முறையில் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பதக்கத்திற்கும் விதமான பேட்டனில் பெட்டிகள் வழங்கப்படும்.

Categories

Tech |