மஹிந்திரா நிறுவனம் தனது புதிய வேரிஎண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதியதாக எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் என்ற புதிய காரை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் எக்ஸ்.யு.வி.400 என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது எஸ்2014 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் எக்ஸ்.யு.வி.300 மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டீசல் என்ஜின் எக்ஸ்.யு.வி.300 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது எக்ஸ்.யு.வி.300 வேரிஎண்ட் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இவை முறையே 115 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் மற்றும் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. இந்த இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட்டை விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.