Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டிலிருந்தே வங்கி கணக்கில் மொபைல் நம்பரை மாற்றலாம்…. 5 நிமிடம் போதும்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்களின் மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனை மாற்ற விரும்பினால் அதற்கு சில நிமிடங்கள் மட்டுமே போதும். வங்கிகள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிளையை நேரடியாக அணுகாமல் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வசதியை வழங்கியுள்ளது. மொபைல் நம்பரை மாற்றுவதற்கு உங்கள் டெபிட் கார்டு மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் தேவைப்படும். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் நம்பரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

நெட் பேங்கிங் வசதியை ஏற்படுத்தி உங்களது மொபைல், லேப்டாப் அல்லது வீட்டில் உள்ள கணினி மூலமாக வங்கி கணக்கின் மொபைல் நம்பரை மாற்றலாம். அதற்கு உதாரணமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்கிங் வெப்சைட் www.onlinesbi.com என்பதில் உள்ளே நுழைந்து, personal data என்பதில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓபன் செய்ய வேண்டும். உள்ளே சென்றதும் உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி இருக்கும். அதில் நீங்கள் உங்கள் மொபைல் நம்பரை மாற்ற முடியும். ஏடிஎம் மூலமாக மாற்றுவதாக இருந்தால் ஏடிஎம் மிஷினில் உங்களது PIN நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். அதன்பிறகு மொபைல் நம்பரை மாற்றுவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.…

Categories

Tech |