Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில்…. மாதத்தில் 30 நாட்களும்…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நியாய விலை கடையில் திடீரென கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்தநியாய விலைக்கடை  ஊழியரிடம் நியாய விலை கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார். நியாயவிலை கடைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும், மாதம் 30 நாட்களும் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |