நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நெல்லை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யபிரகாஷ் 43 ரன்களும் , அர்ஜுன் மூர்த்தி 35 ரன்களும் எடுத்தனர்.
திருப்பூர் தரப்பில் ராஜ்குமார் மற்றும் மொகமது தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் பிறகு களமிறங்கிய திருப்பூர் அணி 149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இறுதியாக 19.5 ஓவர்களில் திருப்பூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மான் பாப்னா 72 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.