ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
ரெனோல்ட் நிறுவனத்தின் 2020 க்விட் கிளைம்பர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணயத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் புதிய காரின் முன்புறம் ரெனால்ட் க்விட் கே-இசட்.இ. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் ஹாலோஜன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் புதிய டெயில் லேம்ப்கள், சி வடிவம் கொண்ட எல்.இ.டி. இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் உள்புறம் அதிகளவு மாற்றத்துடன், மத்தியில் உள்ள டேஷ்போர்டு 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஸ்பீடோமீட்டரும் டிஜிட்டல் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கதவு, இருக்கை மற்றும் சென்டர் கன்சோலில் ஆரஞ்சு நிற அக்சென்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் பி.எஸ். 6 ரக புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1.0 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. இதில் க்விட் கிளைம்பர் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ. 4.55 லட்சம் என்றும் ஏ.எம்.டி. வேரியண்ட் விலை ரூ. 4.85 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.