மாதம் 24 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும் எல்ஐசியின் இந்த சிறந்த எதிர்கால திட்டத்தைப் பற்றி இதில் பார்ப்போம்.
இது ஒரு ஓய்வு முதலீட்டுத் திட்டமாகும். ஒற்றை பிரீமியம் கொண்ட ஒரு பாலிசி. இதன் மூலம் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை நீங்கள் பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் எந்த மருத்துவ சான்றிதழ் தர வேண்டியதில்லை. மருத்துவ கோரிக்கைகள் அல்லது வாழ்க்கைக்கான அபாயப் பாதுகாப்பு எதுவுமில்லை. இதில் இணைய குறைந்தபட்சம் 30 வயது தேவை, அதிக பட்சம் 85 வயது.
அதேபோல குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதலீடு செய்துகொள்ளலாம். அதிகபட்சம் என்பது இல்லை. உங்களது பாலிசி முதிர்ச்சிக்கு என்று அதிகபட்ச வயது கிடையாது. இந்த பாலிசியின் சலுகைகளை நீங்கள் மணி பேக் மூலம் பெற முடியும். உங்கள் ஓய்வு ஊதியம் ஆனது ஒருமுறை பிரீமியம் செலுத்திய உடன் தொடங்கிவிடும். ஓய்வூதியத்தை செலுத்தும் முறை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் . உங்களது வருடாந்திர ஓய்வு ஊதியம், காலாண்டு, அரையாண்டு என்று மூன்று வகைகள் உண்டு. ஓய்வுஊதிய தொகையானது ஆண்டுக்கு 6,000 ரூபாயாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 60 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கலாம்.
உதாரணத்திற்கு
sum Assured: 5000000
Lump Sum Premium: 5090000
பென்ஷன்:
வருடாந்திர பென்ஷன்: 302750
அரையாண்டு பென்ஷன்: 148875
காலாண்டு பென்ஷன்: 73750
மாதாந்திர பென்ஷன்: 24479
ஒரு நபர் ஆப்ஷன் ‘A’-வில் 50,00,000 சம் அஷ்யூர் தேர்வு செய்கிறார் என்றால், அவர் பிரீமியம் தொகையாக ஒரே நேரத்தில் 50,90,000 கட்ட வேண்டும். இதற்குப் பிறகு அவருக்கு மாதா மாதம் பென்ஷனாக 24,479 ரூபாய் கிடைக்கும். பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரை இது கிடைக்கும்.
எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டத்தில், மற்ற பாலிசிகளை போலவே வருமான வரி சலுகைகள் உண்டு. பிரீமியங்களுக்கான வரி என்பது வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் பெறும் ஓய்வூதியம் வரிகுட்பட்டிருக்கும். ஆனால் பிரீமியத்திற்காக நீங்கள் வரி செலுத்த வேண்டி இருக்காது. உண்மையில் இந்த திட்டம் முதலீட்டிற்கான சிறந்த திட்டமாகும்.