Categories
மாநில செய்திகள்

தாலி கட்டினால் செண்டிமெண்ட் வராது, போலீஸ் தான் வரும்….!!!!!

தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக வெளிவர இருக்கின்ற மெகா சீரியல் ஒன்றில் முன்னோட்ட காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் வெளிநாட்டில் படித்து வந்தாலும் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கியே என்று நாயகியிடம் ஒரு பாட்டி சொல்வது போல தொடங்குகின்றது. அந்த முன்னோட்டக்காட்சி கோவிலுக்குள் காதல் ஜோடி ஒன்று தாலி கட்டிக்கொள்ள அடுத்த நிமிடம் அங்கு வரும் சீரியல் நாயகன் இளம் ஜோடியின் தாலியை பறிக்க முயல்கிறான்.

உடனடியாக அங்கு வரும் சீரியல் நாயகி தாலியின் மகத்துவத்தை எடுத்துக் கூறுவது போன்ற சென்டிமென்ட் காட்சி ஒன்றை வைத்துள்ளனர். உடனடியாக அம்மன் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து சீரியல் நாயகி யின் கழுத்தில் போட்டு இப்ப நீ எனக்கு மனைவியா? என்பது போல ஹீரோ குதர்க்கமாக கேள்வி கேட்பது போன்று காட்சி அமைத்துள்ளனர். இந்த தாலி சென்டிமென்ட் காட்சி பெண்களை அடிமைப்படுத்தும் செயல் என்றும் இந்த சீரியல் பெண்களை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றது என்றும் தங்கள் என்ன குமுறல்களை பெண்ணியச் சிந்தனையாளர்கள் ட்விட்டரில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

அந்த காட்சியை பகிர்ந்த திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், “இதுபோன்று கட்டாய தாலி கட்டி பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டால் சென்டிமென்ட் வராது, 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் தான் வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார். இது தற்போது சமூகத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |