தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள இ.புதுக்கோட்டையில் உள்ள நேரு நகரில் ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி முத்துலட்சுமி(30) இந்நிலையில் ராஜா கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற தகராறில் ராஜா மிகவும் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் ராஜா உயிரிழந்த நிலையில் இருப்பதாய் பார்த்த அவரது மனைவி முத்துலட்சுமி கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரியகுளம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.