வறுமையின் காரணமாக கோயிலின் முன்பும், சாலையோரங்களிலும் பலரும் பிச்சை எடுத்து தங்களுடைய பிழைப்பை நடத்தி வருகின்றனர். ஆனால் இவ்வாறு பிச்சை எடுப்பதை விரும்பாத ஒரு சிலர் பிச்சை எடுப்பவர்களை பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .
இந்நிலையில் பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர் என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் பிச்சை எடுப்பதை உயர் வர்க்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.