குடிநீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் Khuzestan பகுதியில் அதிக எண்ணெய் வளம் மிகுந்து காணப்படுகிறது. இந்த Khuzestan பகுதியிலுள்ள Ahvaz நகரில் குடிநீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து Ahvaz நகரத்தில் கடந்த திங்கட்கிழமை 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் வற்றி மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர்.
மேலும் அரசாங்கத்தால் குடிநீர் வழங்க இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று போலீசாருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சிறுவர் உட்பட 8 பேரை போலீசார் சூட்டு கொன்றுள்ளதாகவும் பல பேர் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் பொதுமக்கள் உட்பட மூவர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.