Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி செஞ்சாங்க…. அகற்றப்பட்ட அம்மன் சிலை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அம்மன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்கட்டளை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் சிலர் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரையில் ரேணுகாதேவி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் ரேணுகாதேவி அம்மன் சிலையை அகற்றி அதை வைத்தவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் சிலர் மீண்டும் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அம்மன் சிலையை அகற்றி கருவூலத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |