பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சத்திரமனை பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த குணசேகரன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரின் வயிற்றுவலி குணமாகவில்லை. மேலும் பி.காம் பட்டதாரியான விக்னேஷ் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விக்னேஷ் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.