சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசியம் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளையான்குடி பகுதியில் நஜிமுதீன் என்பவர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அதனைப்பார்த்த காவல்துறையினர் நஜிமுதீனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சாத்தணி கிராமப்பகுதியில் குமார் என்பவர் தனக்கு சொந்தமான கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 39 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.