சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு 76-ஆக அதிகரித்துள்ளதாகவும் கிழக்கு நகரமான நாஞ்சிங்கில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டாக்ஸி சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு நாளைக்கு 5 என பதிவாகி வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 40 பேர் என கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் Jiangsu என்ற பிராந்தியத்தில் 39 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், 39 பேரில் 38 பேர் நாஞ்சிங் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.