அமெரிக்காவில் ஏற்பட்ட மணல் புயலின் காரணத்தால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் சுமார் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் யூட்டா என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலம் பாலைவனங்களால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் யூட்டா மாநிலத்திலுள்ள கனோஷ் என்னும் பகுதியில் திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் சென்ற சுமார் 20 க்கும் மேலான வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மேலும் இதில் படுகாயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.