பாம்பு தனது குட்டிகளுடன் பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரமோகன் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு பாம்பு தனது குட்டிகளுடன் பதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து சந்திரமோகன் மலைப்பாம்புகளாக இருக்கும் என நினைத்து அருகிலுள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்களின் உதவியோடு சந்திரமோகன் கொடிய விஷமுள்ள அந்த பாம்பை பிடித்து பேரலில் போட்டு தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
அதன்பின் தவளையை பிடித்து பாம்புகளுக்கு உணவாக அதன் உள்ளே போட்டுள்ளார்.இதனைதொடர்ந்து சந்திரமோகன் தனது வீட்டிலேயே ஒரு நாள் இரவு முழுவதும் அந்த டிரம்மை வைத்துள்ளார். இதுகுறித்து சந்திரமோகன் மறுநாள் காலையில் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் பிடிப்பட்ட கொடிய விஷமுள்ள அந்த பாம்பை வரட்டுப்பள்ளம் அணைபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.