Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உயிரை பணயம் வைத்து…. குற்றவாளியை பிடித்த போலீஸ்…. திருச்சியில் பரபரப்பு…!!

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கஞ்சா கடத்திய வாலிபரை போலீஸ் ஏட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரின் தனிப்படை காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக காரில் வைத்து கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் மன்னார்புரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முயன்று உள்ளனர். ஆனால் அந்த காரை ஓட்டிய நபர் நிறுத்தாமல் வேகமாக சென்றதால் மோட்டார் சைக்கிளில் காவல்துறையினர் அதனை விரட்டி சென்றுள்ளனர். இதனை அடுத்து சற்றும் எதிர்பாராத சமயத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து ஏட்டு சரவணன் காரின் மீது குதித்து அதனை நிறுத்தும் படி நீண்ட நேரமாக எச்சரித்தும் அந்த நபர் அதனை கேட்கவில்லை.

இவ்வாறாக உயிரை பணயம் வைத்து போலீஸ் ஏட்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் காரின் மேற்பகுதியிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து சரவணன் ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்து வளைத்ததால் தடுப்பு சுவரின் மோதி கார் நின்றுவிட்டது. அதன் பிறகு காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரித்த போது அவர் புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது எனபது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவர்  கடத்திய 21 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |