Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வாழவே விருப்பம் இல்ல” மகனை கொன்ற தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் இளவேனில் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் இறந்ததால் நிஷா தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து தனது கணவரின் நினைவு தினத்தை முன்னிட்டு சோகமாக இருந்த நிஷா மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு நிஷா கத்தியால் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிஷாவின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |