Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில்… 3 பேர் படுகாயம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூப்பன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பாலமோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பால மோகன் மற்றும் மீனாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் ராஜபாண்டி என்பவரும் இணைந்து வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நாச்சியார்புரம் பகுதியில் வசிக்கும் மின்வாரிய ஊழியரான மாடசாமி என்பவர் வேகமாக சென்று திடீரென பால மோகனின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டார்.

இந்த விபத்தில் மாடசாமி, பாலமோகன் மற்றும் ராஜபாண்டி ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டதால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |