Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவள் இல்லாம இருக்க முடியல” தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் செல்வத்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவி இல்லாமல் மன உளைச்சலில் இருந்த செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |