வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துளசிப்பட்டி பகுதியில் காளியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கான பணியானது தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில் காளியம்மாள் தனது பழைய வீட்டில் உள்ள பொருட் களை எடுப்பதற்காக சென்றபோது திடீரென வீட்டின் சுவர் இவரின் மீது இடிந்து விழுந்து விட்டது.
இதில் காளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.