கடந்த ஜூலை 19ம் தேதி ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷெர்லின் சோப்ராவை மும்பை போலீசார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ஆபாச பட தயாரிப்பு வழக்கில் தற்போது காமசூத்ரா படத்தில் நடித்த நடிகை ஷெர்லின் சோப்ராவும் சிக்கியுள்ளார். இவர் மும்பை குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இவரைத் தொடர்ந்து வேறு சில கவர்ச்சி நடிகைகளும் இந்த விவகாரத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் யூனிவர்சிட்டி படத்தில் நடித்துள்ளார்.
Categories