தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.